வேடசந்தூர் அருகே நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி
வேடசந்தூர் அருகே நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலியானது.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் வீட்டின் அருகில் கிடை அமைத்து வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை அவரது ஆட்டுக்கிடைக்குள் தெருநாய்கள் புகுந்து, ஆடுகளை கடித்து குதறின. இதனால் ஆடுகள் கத்தின.
இதனை கேட்ட சின்னசாமி மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆட்டுக்கிடைக்கு விரைந்து வந்து, தெருநாய்களை விரட்டினர். நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்துபோயின. 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. பின்னர் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய்கள் கடித்து 15 ஆடுகள் பலியாகியுள்ளன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Tags :
Next Story