வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


வடமதுரை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 4 May 2022 8:04 PM IST (Updated: 4 May 2022 8:04 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

வடமதுரை:
சாணார்பட்டி அருகே உள்ள கோணபட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). தொழிலாளி. அதே ஊரை சேர்ந்தவர் அழகுமணி (20). இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
இவர்கள் 2 பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. ஆனால் அவர்களது காதலுக்கு இருவீட்டார் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் 2 பேரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பிறகு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரின் பெற்றோர்களையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பாலமுருகனின் பெற்றோர் அவர்களை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களுடன் காதல் ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story