தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 4 May 2022 8:13 PM IST (Updated: 4 May 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதம் அடைந்த சாலை
ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் தார்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
-ரமேஷ்குமார், பாளையங்கோட்டை.
பயணிகள் நிழற்குடை வேண்டும்
சித்தையன்கோட்டை அருகேயுள்ள சேடப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை கட்டித்தர வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
சின்னாளப்பட்டி பகுதியில் மழைநீர் கால்வாய், வண்டிப்பாதை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் மழைநீர் சீராக செல்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-கல்யாணசுந்தரம், சின்னாளப்பட்டி.
அந்தரத்தில் தொங்கும் தெருவிளக்கு
தேனி மாவட்டம் சிலமலை கிராமம் புதுக்காலனியில் ஒரு மின்கம்பத்தில் தெருவிளக்கை சரியாக பொருத்தவில்லை. இதனால் மின்வயரின் பிடியில் அந்தரத்தில் தொங்கியபடி தெருவிளக்கு உள்ளது. எனவே தெருவிளக்கை சரியாக பொருத்தி எரிய வைக்க வேண்டும்.
-ஆறுமுகம், தேனி.
சாக்கடை கால்வாயில் அடைப்பு
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை அடுத்துள்ள சின்னையாபுரத்தில் அறிவுதிருக்கோவில் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் சீராக செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-குமார், திண்டுக்கல்.

Next Story