தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
திருக்குறள் திருத்தி எழுதப்பட்டது
குலசேகரம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு குறள் ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது நிற்க அதற்கு தக’ என்று தவறாக எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றிய செய்தியும், படமும் ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தவறாக இருந்த திருக்குறளை திருத்தி எழுதினர். இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ராஜபாதை நேசமணி நகரில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் சரியாக மூடப்படாததால் சாலை ேசதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ், நேசமணிநகர்.
காத்திருக்கும் ஆபத்து
நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கின் அடிப்பகுதியில் உள்ள பெட்டி திறந்து கிடக்கிறது. அதில் பீஸ் மற்றும் வயர்கள் சிறுவர்கள் தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதால், யாராவது கவனக்குறைவாக பெட்டிக்குள் கைவைத்்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து விபத்து நடப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரபீக், நாகர்கோவில்.
சேதமடைந்த சாலை
சரலூரில் இருந்து செந்தூரான் நகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு சேதமடைந்து ெபயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருண், செந்தூரான் நகர்.
சாலையை விரிவுபடுத்த வேண்டும்
குலசேகரம் அரசமூடு சந்திப்பில் தபால்நிலையம் உள்ளது. இதன் அருகே சாலைக்கும், மழைநீர் வடிகால் ஓடைக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் சாலையோரத்துக்கு சென்றால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை வடிகால் ஓடை வரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவசகாயம், குலசேகரம்.
விபத்து அபாயம்
வட்டவிளையில் இருந்து வேதநகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த பகுதியில் சாலைப்பணி நடந்து வருகிறது. அந்த பணியை முடிப்பதற்குள் மின்கம்பங்களை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேஷ், வட்டவிளை.
Related Tags :
Next Story