வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி


வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி
x
தினத்தந்தி 4 May 2022 8:36 PM IST (Updated: 4 May 2022 8:36 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை நகராட்சி 34-வது வார்டு பட்டமங்கல புதுத்தெரு, ஸ்ரீநகர் காலனி பகுதியில்  6.5 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணான்குளம் அமைந்துள்ளது. இந்த  குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைமேடையும், அருகாமையில் பூங்காவும் அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் இக்குளத்தை சுற்றிலும் நகராட்சி சார்பில் ரூ.1.46 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கழிவறை, குடிநீர், கண்காணிப்பு கேமரா, மின்விளக்கு வசதியுடன் நடைமேடை மற்றும் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சிக்கு நகர மன்ற  தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பாலு, நகரசபை துணைத் தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ராஜகுமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. நகர துணை செயலாளர் ஆர்.கே.சங்கர், டாக்டர் கிரஹாம் டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story