தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி தற்கொலை
வேடசந்தூர் அருகே தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகி தற்கொலை செய்துகொண்டார்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). மினி லாரி டிரைவரான இவர், வேடசந்தூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த வேல்முருகன் நேற்று மதியம் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக வேல்முருகன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தி.மு.க. பிரமுகர் தற்கொைல செய்த சம்பவம், வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story