தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரியாக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
அரசியல் ஆதாயத்துக்காக தலித் சமூகத்தை சேர்ந்தவரை முதல்-மந்திரியாக்க காங்கிரஸ் வலியுறுத்துவதாக மத்திய மந்திரி நாராயணசாமி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மத்திய மந்திரி நாராயணசாமி
மத்திய மந்திரி நாராயணசாமி, ஒருநாள் சுற்றுப்பயணமாக மைசூருவுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பா.ஜனதா அரசால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்தியாக்க முடியுமா என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. அரசியல் ஆதாயத்துக்காக தலித்தை முதல்-மந்திரியாக்க காங்கிரசார் வலியறுத்தி வருகின்றனர்.
அருகதை இல்லை
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரியாகும் தகுதி உள்ளது. ஆனால் அவருக்கு காங்கிரஸ் முதல்-மந்திரி பதவி வழங்கவில்லை. இதற்கிடையே ஜனதா தளம்(எஸ்) தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்-மந்திரியாக அமர்த்துவோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் அக்கட்சியில் தலித் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தலித் முதல்-மந்திரி பற்றி காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) பேச அருகதை இல்லை. பா.ஜனதா கட்சியில் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் உயர்ந்த பதவியில் உள்ளனர். ஆனால் காங்கிரசார் தலித் மக்களின் பிரச்சினையை மட்டுமே பேசுகின்றனர். ஆனால் செயலில் ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story