கல்வராயன்மலையில் ரூ.75 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி
கல்வராயன்மலையில் ரூ.75 லட்சத்தில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கச்சிராயப்பாளையம் அடுத்த கல்வராயன்மலையில் வஞ்சிக்குழி கிராமத்தில் இருந்து எடப்பட்டு கிராமம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவசர காலங்களில் வெளியேவர முடியாமல் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் எடப்பட்டு கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரவேண்டும் என சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ரூ.75 லட்சம் மதிப்பில் தாா்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி பூமி பூஜையுடன் தொடங்கியது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலகர் அண்ணாதுரை, ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணைத்தலைவர் பாஷாபி ஜாகிர்உசேன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம், வனசரகர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னத்தம்பி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்னக்கண்ணு, குப்புசாமி, கல்யாணிகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், அன்பு, நிர்வாகிகள் வெங்கடேசன், அருள், குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story