கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
கீழக்கரை,
கீழக்கரை நகராட்சி பகுதியில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு வீடுகளில் கழிவுநீர் நகராட்சி வாருகால் மூலம் வெளியேற்றப்பட்டு கடலில் விடப்படுகிறது. இந்தநிலையில் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள கழிவு நீர் வாய்க்காலின் சிமெண்டு பகுதிகள் உடைந்து பல்வேறு இடங்களில் குப்பைகள் நிறைந்து வாய்க் காலில் கழிவுநீர் தேங்கி ஆங்காங்கே அசுத்தம் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி தலைவர் சஹானாஸ் ஆபிதா கூறிய தாவது:- கீழக்கரை நகராட்சி உட்பட்ட 21 வார்டுகளின் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் கழிவுநீர் எங்கும் தேங்காமல் சீரான முறையில் செல்லும். மேலும் விரைவில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. மூலம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல் படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும். கீழக்கரையில் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் கீழக்கரை அருகே உள்ள கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட கிணறுகளை சீரமைத்து அங்கிருந்து ஊருக்கு வரும் குடிநீர் இணைப்புகளை சீரமைத்து அதன்மூலம் கீழக்கரைக்கு தேவையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோன்று கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் அதனை மறுசுழற்சி செய்து சுத்திகரித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவிரி கூட்டு குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில் தேவையான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story