சேவூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன
சேவூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன
சேவூர்,:
சேவூர் பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பலத்த காற்று
சேவூர் பகுதியில் நேற்றுமுன்தினம் கடும் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் மரங்கள் ேவரோடு சாய்ந்தன.முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரிய காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஒட்டி இருந்த பழமையான மரம், வேரோடு சாய்ந்தது.
அந்த மரம் பள்ளி தடுப்புச் சுவரின் மீது விழுந்ததால், தடுப்புச்சுவரை சேதப்படுத்தி பள்ளி வளாகத்திற்குள் விழுந்தது.அதேபோன்று, பெரிய காட்டுபாளையம், ஆதி திராவிடர் காலனியில் இருந்த, பழமையான மரம் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின் இணைப்புதுண்டிக்கப்பட்டது. மேலும்அங்குள்ள அன்னமார் கோவில் கூரையில் வேயப்பட்டிருந்த தகர ஷீட், பலத்த காற்றுக்கு தூக்கி வீசப்பட்டது. இதை தொடர்ந்துமுறியாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ப.ரவிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகசாமிஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
சீரமைப்பு
பின்னர் மரங்கள், மரக்கிளைகள் அனைத்தும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பல்வேறு பகுதிகளில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அவை சீரமைக்கப்பட்டன.
Related Tags :
Next Story