பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு
முதுகுளத்தூர் அருகே பள்ளி கட்டிடம் இடிந்து சேதம் அடைந்துள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே பள்ளி கட்டிடம் இடிந்து சேதம் அடைந்துள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
புதிய கட்டிடம்
முதுகுளத்தூர் அருகே வளநாடு கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின் றனர்.
இந்த நிலையில் இந்த அரசு பள்ளிக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் பொது நிதியில் இருந்து பள்ளி வகுப்பறை, தலைமை ஆசிரியர் அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறந்து பயன்பாட்டிற்கு வந்தது.
இந்தநிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை இடிந்து திடீரென சரிந்து விழுந்தது.
உறுதி
அப்போது அங்கு யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தகவல் அறிந்து அந்த பள்ளியின் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றனர்.
பள்ளி நிர்வாகம் சேதங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் தற்போது வரை சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படாததை கண்டித்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து உள்ள தால் ஆசிரியர் மட்டுமே பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பள்ளி மாணவர்கள் இன்றி வெறிச்சோடி உள்ளது.
சேதம்
10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அருகில் உள்ள நடுநிலைப்பள்ளி மரத்தடியில் பாடம் நடத்தி வருகின் றனர். இந்த தகவல் அறிந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோரிடம் சேதம் அடைந்துள்ள பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என உறுதி அளித்து உள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story