சங்கராபுரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை
சங்கராபுரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கத்தரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இந்த நிலையில் நேற்று மாலை 5.15 மணியளவில் சங்கராபுரம் பகுதியில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன், பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இந்த திடீர் மழையால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story