செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2022 10:45 PM IST (Updated: 4 May 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் விஜயலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். துணைத் தலைவர் சிசிலி காருண்யா கோரிக்கை குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், 2015-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்ந்த செவிலியர்கள் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் லாவண்யா நன்றி கூறினார்.

Next Story