வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 May 2022 11:01 PM IST (Updated: 4 May 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னியந்தல் - வள்ளிவாகை சாலையில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் சிறுபாலம், திரும்ப கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் முருகேஷ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
தொடர்ந்து திருவண்ணாமலை - திண்டிவனம் சாலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.21 கோடியே 47 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

மேலும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.5 கோடியே 53 லட்சம் மதிப்பில்  கடலூர்-திருவண்ணாமலை- சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் மேம்பாட்டு பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட அவர் திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அறிவு சார் மையம் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியினையும், திருவண்ணாமலை நகராட்சியில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை பார்வையிட்ட அவர் செங்கம் சாலையில் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆதரவற்றோர்கள் தங்கும் இடத்தினையும், ஈசான்ய மைதானம் அருகில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மையத்தினையும் அவர் ஆய்வு செய்தார். 

அப்போது நெடுஞ்சாலைதுறை கோட்டப்பொறியாளர் முரளி, உதவி கோட்டப்பொறியாளர் கே.ரகுராமன், தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப்பொறியாளர் மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் தனசேகரன், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், நகர நல அலுவலர் மோகன், திருவண்ணாமலை தாசில்தார் சுரேஷ் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story