வெடி விபத்தில் தொழிலாளி பலி


வெடி விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 4 May 2022 11:03 PM IST (Updated: 4 May 2022 11:03 PM IST)
t-max-icont-min-icon

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பலியானார்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி பலியானார். 
வெடி விபத்து 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 57). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. 
இந்த பட்டாசு தொழிற்சாலையில் 5-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இங்கு வழக்கம்போல்  காலை பணிகள் தொடங்கின. பட்டாசு உற்பத்திக்கு தேவையான மருந்துகளை கலக்கும் கலவை அறையில் வேலை நடந்து கொண்டு இருந்தது.
அப்போது திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமாகி, தீ கொழுந்துவிட்டு எரிந்தது. 
மீட்பு பணி 
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர் அவர்களும், அம்மாபட்டி போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
சுந்தரகுடும்பன்பட்டியை சேர்ந்த சோலைவிக்னேஷ் (26) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. 
சோலைவிக்னேசின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்த பகுதியை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்தது.
இந்த வெடிவிபத்து குறித்து அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story