ரூ14 கோடி பாக்கியை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை விவசாயிகள் திடீர் முற்றுகை விக்கிரவாண்டியில் பரபரப்பு
ரூ14 கோடி பாக்கியை கேட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளை விவசாயிகள் திடீர் முற்றுகை விக்கிரவாண்டியில் பரபரப்பு
விக்கிரவாண்டி
3,500 விவசாயிகள்
விக்கிரவாண்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த சில மாதங்களாக மணிலா, எள், நெல், உளுந்து போன்ற தானிய வகைகள் விற்பனை செய்த சுமார் 3 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு ரூ.14 கோடி பாக்கி தரவேண்டியுள்ளது. பல வியாபாரிகளிடமிருந்து பணம் வரததால், விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் சரி வர பணம் செலுத்த வில்லை என கூறப்படுகிறது.
விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகாரிகளிடம் கேட்டும் பணம் கணக்கில் செலுத்தவில்லை.
கலெக்டர் உத்தரவு
இதை அறிந்து கடந்த மாதம் 26-ந் தேதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை ஆய்வு செய்த விழுப்புரம் கலெக்டர் மோகன் விவசாயிகள் பாக்கி பணத்தை விரைந்து வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். அதன் பிறகும் நிலைமை சீராகாததால் நேற்று கமிட்டிக்கு வந்த விவசாயிகள் பாக்கி பணத்தை கேட்டு திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.
அப்போது வியாபாரி ஒருவர் பாக்கி பணத்தை தராத விற்பனைக் கூடத்துக்கு ஏன் வருகிறீர்கள் என்றார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட செயலாளர் விஷ்ணப்பன், மேற்பார்வையாளர் ஜாக்குலின் மேரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பாக்கிபணத்தை 15 நாட்களுக்குள் பட்டுவாடா செய்வதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்தாத வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story