நெல் எடை போடுவதில் ஏற்படும் குளறுபடியை கண்டித்து விவசாயிகள் மறியல்
நெல் மூட்டைகளை எடைபோடுவதில் குளறுபடி கண்டித்து போளூர் மார்க்கெட்டிங் கமிட்டி முன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
கலசபாக்கம்
நெல் மூட்டைகளை எடைபோடுவதில் குளறுபடி கண்டித்து போளூர் மார்க்கெட்டிங் கமிட்டி முன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
போளூரில் வேலூர் செல்லும் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டியில் போளூர் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தினமும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விற்பதற்காக கொண்டு வருகின்றனர். அவ்வாறு வரும்போது முதலில் வருபவர்களின் நெல் மூட்டைகள் உள்ளே அடுக்கப்பட்டபின் கடைசியாக வருபவர்களை வெளியில் அடுக்கப்படுகின்றன.
இதில் எடைபோடும் போது முதலில் வருபவர்களை விட்டு விட்டு கடைசியாக வருபவர்களின் நெல் மூட்டைகள் எடை போடப்படுகின்றன. இதனை கண்டித்து போளூர்- வேலூர் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போளூர் போலீசார் மற்றும் மார்க்கெட்டிங் சூப்பிரண்டு தாமோதரன் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் விவசாயிகளை சமரசம் செய்தனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில் கடைசியாக வருபவர்களின் நெல் மூட்டைகளை பணம் பெற்றுக்கொண்டு எடை போடுகின்றனர். முதலில் வந்தவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்த குளறுபடியை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்பு அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து முதலில் வருவதற்கு டோக்கன் மூலம் எடை போடும் முறையை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று சாலை மறியலை விவசாயிகள் விலக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன.
Related Tags :
Next Story