கார்கூடல்பட்டி ஊராட்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மின்கம்பங்கள், குடிசைகள் சேதம்


கார்கூடல்பட்டி ஊராட்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: மின்கம்பங்கள், குடிசைகள் சேதம்
x
தினத்தந்தி 4 May 2022 11:30 PM IST (Updated: 4 May 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

கார்கூடல்பட்டி ஊராட்சியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பங்கள், குடிசைகள் சேதம் அடைந்தன.

நாமகிரிப்பேட்டை,:
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழைக்கு 4 மின்கம்பங்கள் கீழே சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் கார்கூடல்பட்டி ஊராட்சியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதேபோல் சூறைக்காற்று, மழைக்கு குடிசைகள் சேதமடைந்தன. மின்வாரிய அலுவலர்கள் விரைந்து சென்று மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story