வீடு கட்ட நிதி உதவி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்-உதவி ஆணையர் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி பெற கட்டுமான தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
வீடு கட்ட நிதி உதவி
நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருநந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
ஆண்டு வருமானம்
இந்த திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு பெற்றிருக்க வேண்டும். பதிவு பெற்று 3 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. அரசின் வேறு எந்த இலவச வீட்டு வசதி திட்டங்களிலும் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
தொழிலாளியின் பெயரில் 300 சதுர அடி அல்லது 28 சதுர மீட்டர் வீட்டுமனை இருக்க வேண்டும். தொழிலாளியின் பெயரில் வீட்டுமனை பட்டா இருக்க வேண்டும் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுப் பட்டா இருத்தல் வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து https:/tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story