நாமக்கல்லில் நுங்கு விற்பனை மும்முரம்
நாமக்கல்லில் நுங்கு விற்பனை மும்முரமாக நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்ததால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், தர்பூசணி கடைகளை நாடி சென்று தாகத்தை தணித்து கொண்டனர். பதநீர், நுங்கு விற்பனையும் மும்முரமாக நடந்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வாங்கி வரப்படும் பதநீர் ஒரு டம்ளர் ரூ.20-க்கும், நுங்கு அதன் தரத்தை பொறுத்து ரூ.25-ல் இருந்தும் விற்பனை செய்யப்பட்டன. இதை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story