ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலம்
திருத்துறைப்பூண்டி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே ஆபத்தான நிலையில் உள்ள மரப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மரப்பாலம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம், ஊராட்சி பாரதி நகர் உள்ளது. இந்த பகுதியிலிருந்து நாலாநல்லூர் பகுதிக்கு செல்ல முள்ளியாற்றின் குறுக்கே மரப்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவியர்கள் வேலைக்கு செல்லும் முதியவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் என அனைவரும் இந்த பாலத்தை கடந்து செல்ல வேண்டும். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர், மற்ற வாகனங்களில் செல்வோர் வேறு மாற்றுப்பாதையில் தான் செல்ல வேண்டும்.
புதிய சிமெண்டு பாலம்
தற்போது இந்த பாலம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இருசக்கர வாகனத்தை பாலத்தில் தள்ளிக்கொண்டு செல்ல முடியாத சூழல் உள்ளது. என இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story