நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்-20,662 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்


நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்-20,662 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 4 May 2022 11:32 PM IST (Updated: 4 May 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது.

நாமக்கல்:
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 10 ஆயிரத்து 954 மாணவர்கள், 9 ஆயிரத்து 708 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 662 பேர் எழுத உள்ளனர். இதற்காக மாவட்டம் முழுவதும் 89 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த தேர்வு பணியில் 19 வழித்தட அலுவலர்கள், 10 வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள் 90 அறை கண்காணிப்பாளர்கள், 1,310 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வை கண்காணிக்க 161 பேர் நிரந்தர பறக்கும்படை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story