கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரியில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தேர்நிலை தெருவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது22). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழ்சோமார்பேட்டையை சேர்ந்த பிரவீன்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 3-ந் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது, இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story