பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திலகம் உத்தரவுபடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம் பைசுஅள்ளி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பெரியசாமி வரவேற்றார். துணை முதல்வர் செல்வராணி முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி கலைவாணி விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும், புகையிலை பொருட்களை இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் விளக்கி பேசினார். இந்த முகாமில் சுகாதார கருத்தாளர் ரங்கராஜன் புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநல பாதிப்புகள் குறித்து விளக்கினார். இந்த முகாமில் சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் அருள் மற்றும் விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இந்த முகாமில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story