காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு


காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 4 May 2022 11:33 PM IST (Updated: 4 May 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தார்.

காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ஏ.சப்பானிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி தாழம்பூ (வயது30) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தாழம்பூ கடந்த பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். இதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று பூரண குணம் அடையவில்லை.  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அந்த பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்த சிலர் தவறி விழுந்த தாழம்பூவை மீட்க முயன்றனர். ஆனால் கிணறு ஆழமாக இருந்ததால் அவரை மீட்க முடியவில்லை.  இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கிணற்றில் இருந்து தாழம்பூவை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதையடுத்து அவருடைய உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story