பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 4 May 2022 11:34 PM IST (Updated: 4 May 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்தரகோசமங்கையில் வராகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது பெரியநாயகி அம்மன் திருக்கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் முடிந்து நேற்று காலை 10.30 மணி அளவில் மூலஸ் தானத்தில் பெரியநாயகி அம்மன் சிலைக்கு சர்வ சாதகம் சிவஸ்ரீ முத்துக்குமார குருக்கள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் பெரிய நாயகி அம்மன், வீரப்பசாமி, இருளப்பசாமி, விநாயகர், உத்தண்ட ராயர், வாகையடி மூர்த்தி, பெத்தாரன்சாமி, தெய்வ ரங்க பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவையொட்டி ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இளங்கோவன், உத்தண்டி, பெத்தபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் உத்தண்டவேலு, பிரபாகர் மற்றும் குலதெய்வ வழிபாட்டு பக்தர்கள், கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.

Next Story