33 ஆண்டுகளுக்கு பிறகு அரசு நிலத்தை திரும்ப ஒப்படைத்த சுனில் கவாஸ்கர்
33 ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்தாத அரசு நிலத்தை சுனில் கவாஸ்கர் திரும்ப ஒப்படைத்தார்.
மும்பை,
இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சுனில் கவாஸ்கர். இவருக்கு கிரிக்கெட் அகாடமி அமைப்பதற்காக, மாநில அரசு கடந்த 33 ஆண்டுகளுக்கு முன் பாந்திராவில் நிலத்தை ஒதுக்கியது. ஆனால், அந்த நிலத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தாமல் வைத்திருந்தார்.
இந்நிலையில், மராட்டிய வீட்டு வசதித்துறை மந்திரி ஜிநே்திர அவாத், இந்த நிலத்தை பயன்படுத்தாமல் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்குமாறும் வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து அந்த நிலத்தில், கிரிக்கெட் அகாடமி தொடங்கும் பணியை சுனில் கவாஸ்கர் மும்முரப்படுத்தினார்.
இது தொடர்பாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
8 மாத கால ஆலோசனைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், இந்த இடத்தில் கிரிக்கெட் அகாடமி அமைப்பதில்லை என்றும், நிலத்தை அரசிடமே திரும்பி தருவதாகவும் சுனில் கவாஸ்கர் முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில் உறுதிபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story