தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாலத்தில் குவிந்து கிடக்கும் மண்
அரியலூர்-ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் சின்னநாகலூர் பாதைக்கு கிழக்கு பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் இருபுறமும் குறிப்பிட்ட தூரம் போக்குவரத்திற்கு இடையூராக அதிகளவில் மண் மற்றும் வைக்கோல் ஆகியவை தேங்கியுள்ளன. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு இருசக்கர வாகன ஓட்டிகள் நிற்கும் போது மண் சறுக்கல் ஏற்பட்டு கீழே விழுந்து விடுகிறார்கள். தற்போது காற்று அடிப்பதால் அதிகளவில் புழுதி பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், வி.கைகாட்டி, அரியலூர்.
வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரமானது பல ஊர்களுக்கு செல்ல மையப்பகுதியாக இருக்கிறது. ஆனால் இங்கு வழிகாட்டி பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வழிகாட்டி பலகை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே ஜெயங்ெகாண்டம் பகுதிகளில் வழிகாட்டி பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பாலச்சந்தர், ஜெயங்கொண்டம், அரியலூர்.
போக்குவரத்துக்கு இடையூறு
பெரம்பலூரில் முக்கிய பகுதிகளான புதிய, பழைய பஸ் நிலையங்கள், பாலக்கரை, ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பெரம்பலூர்.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சமுத்திரம் ஊராட்சி மேட்டுப்பட்டி ரைஸ் மில்லில் இருந்து திருமலைராயர் சமுத்திரம் செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சில நேரங்களில் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
தேவி, திருவரங்குளம், புதுக்கோட்டை.
சாக்கடையாக மாறிய வாய்க்கால்
திருவரங்குளம் ஊராட்சி கே.வி.எஸ். நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வரத்து வாய்க்காலில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி உள்ளது. இதனால் அதில் இருந்து ெகாசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும், அந்த குப்பைகளை அள்ளுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம்.
சித்ரா, திருவரங்குளம், புதுக்கோட்டை.
ஊருக்குள் பஸ் வந்து செல்ல நடவடிக்கை
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் இருந்து கரூருக்கு புறப்பட்டு வரும் அனைத்து பஸ்களும் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வந்து செல்லும். ஆனால் கடந்த சில நாட்களாக எந்த பஸ்களும் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வராமல் புறவழி சாலை வழியாக கரூருக்கு செல்கிறது. இதனால் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று புறவழிச்சாலையில் பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கரூருக்கு செல்லும் பஸ்கள் வேலாயுதம்பாளையம் ஊருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம், கரூர்.
Related Tags :
Next Story