அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய பொதுமக்கள்
அரசு பள்ளிக்கு பொதுமக்கள் கல்விச்சீர் வழங்கினர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம், கொத்தகப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவ்வூர் பொதுமக்களால் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) ராஜேந்திரன் வரவேற்றார். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஒன்றுகூடி தாங்களாகவே முன் வந்து பள்ளிக்கு தேவையான கல்வி உபகரணங்களான தண்ணீர் தொட்டி, அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள், பீரோ, மின்விசிறி, டேபிள், நாற்காலி, கணினி, கண்ணாடிகள், தட்டு, டம்ளர்கள், பாய்கள், எழுதுபொருட்கள், நோட்டுகள், தண்ணீர் குடம், வரலாற்று தலைவர்களின் புகைப்படங்கள், பூமிப்பந்து, மரக்கன்றுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ஆடிப்பாடி ஊர்வலமாக கொண்டு வந்து பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கினர். விழாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாத்தி, ஆசிரியர்கள் மணிகண்டன், ரஹமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்விச்சீர் பெற்றுக்கொண்ட ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர்பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Related Tags :
Next Story