13,373 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்


13,373 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 4 May 2022 11:54 PM IST (Updated: 4 May 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில், இன்று 13,373 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறாா்கள்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில், இன்று 13,373 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறாா்கள். 
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 57 தேர்வு மையங்களில் 6 ஆயிரத்து 320 மாணவர்கள், 7 ஆயிரத்து  53 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 373 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதைெயாட்டி வினாத்தாள்கள் கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேர்வு அறைகளில் மேஜைகளில் மாணவா்களின் தேர்வு பதிவு எண்களை எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். பள்ளியின் வாசலில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விதிமுறைகள் குறித்து பலகை வைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை
தேர்வு பணிக்கு 1,238 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ்துறையுடன் இணைந்து நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்விதமுறைகேடும் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எச்சரிக்கை
தேர்வு மையத்தில் செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காப்பி அடித்தல், அனுமதிக்கப்படாத துண்டு சீட்டுகள் எடுத்து செல்லுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story