விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 May 2022 11:55 PM IST (Updated: 4 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


நொய்யல், 
புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள விநாயகருக்கு சித்திரை மாத வளர்பிறை சதுர்த்தி முன்னிட்டு பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் முத்தனூர் வருண கணபதி, சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச்சாலை அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Next Story