பிள்ளைகள் கவனிக்காததால் தம்பதி தற்கொலை


பிள்ளைகள் கவனிக்காததால் தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 4 May 2022 11:55 PM IST (Updated: 4 May 2022 11:55 PM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திருவலம்

திருவலம் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

 பிள்ளைகள் கவனிக்கவில்லை

வேலூர் மாவட்டம் திருவலம் அருகில் உள்ள சின்ன ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 65). இவரின் மனைவி சாந்தி (62). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

முருகையனும், சாந்தியும் தனியாக சின்னராமநாதபுரத்தில் வசித்து வந்தனர். முருகையனுக்கு கண் பார்வை மங்கி விட்டது. வயது முதிர்ந்த அவர்களை பிள்ளைகள் சரிவர கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கணவன், மனைவி இருவரும் நேற்று காலை ஒரே அறையில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
 
போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகள் கவனிக்காததால் கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story