பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 4 May 2022 11:59 PM IST (Updated: 4 May 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

கரூர், 
கரூர் தாந்தோணிமலை அருகே உள்ள முத்தலாடம் பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 22). பெயிண்டர். இவர் சம்பவத்தன்று காளியம்மன் கோவில் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த தென்றல் நகரை சேர்ந்த சந்திரன் (26), பொன்னகரை சேர்ந்தவர் ரங்கா என்கிற ரங்கநாதன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து நவீன்குமாரை கிண்டல் செய்துள்ளனர். இதுபற்றி நவீன்குமார் அவர்களிடம் கேள்வி கேட்டுள்ளார். 
இதனால் ஆத்திரமடைந்த சந்திரன், ரங்கநாதன் ஆகியோர் சேர்ந்/து நவீன்குமாரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டியதுடன் பீர்பாட்டில் மற்றும் உருட்டு கட்டையால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த நவீன்குமார் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிந்து, சந்திரனை கைது செய்தார். ரங்கநாதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.




Next Story