தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை


தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 May 2022 12:01 AM IST (Updated: 5 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம், 
ராஜபாளையம் அருகே தனது தம்பி சாவில் சந்ே்தகம் இருப்பதாக அக்காள் அளித்த புகாரின் பேரில் தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 
ெதாழிலாளி சாவு 
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூரை சேர்ந்தவர் பாக்கியராஜ். (வயது 38). தொழிலாளி. இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார். எனவே அவரது சகோதரி மேரி என்பவர் ஆதரவுடன், தனி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி நள்ளிரவு பாக்கியராஜ் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்காமல், உறவினர்கள் பாக்கியராஜ் உடலை அருகே உள்ள இடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாக்கியராஜ் தங்கி இருந்த வீட்டிற்கு மேரி சென்றுள்ளார். அப்போது வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்த கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகம் அடைந்த மேரி இதுகுறித்து நேற்று முன்தினம் தளவாய்புரம் போலீசில் புகார் அளித்தார். மேலும் பாக்கியராஜின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். 
உடல் தோண்டி எடுப்பு 
இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் முன்னிலையில் போலீசார், நேற்று பாக்கியராஜின் உடலை தோண்டி எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அப்பகுதியிலேயே விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவர் சுதன், பாக்கியராஜின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். 
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவரது இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மேரி, தனது மூத்த சகோதரன் அந்தோணிராஜிக்கும், பாக்கியராஜிக்கும் முன்விரோதம் இருந்ததாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறி அளித்த புகாரின் பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி ராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story