விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் வீர செங்கோலன், வக்கீல் சீனிவாசராவ் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கூறுகையில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தால் நாடுமுழுவதும் நீர்நிலைகள், ஆறுகள் மற்றும் சுற்றுப்புறச்சூழல் மாசு அடைகிறது. மேலும், மனிதர்கள், கால்நடைகள் மற்றும் பறவை இனங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்ய வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்றனர். இதனைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை சந்தித்து பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யக்கோரி மனு அளித்தனர்.
Related Tags :
Next Story