கரூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கரூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்,
கரூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் நேற்று மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையிலான சுகாதார ஆய்வாளர்கள் குழுவினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகள் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த மொத்த விற்பனை கடை, மளிகை கடை, உணவகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில் உழவர்சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் ஓட்டலில் ஆக்கிரமிப்பு மற்றும் சுகாதாரம் இன்றி உணவு தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய காரணங்களுக்காக மாநகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதித்து பூட்டி சென்றனர்.
Related Tags :
Next Story