நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: பெரம்பலூரில் 8,108 பேர் எழுதுகிறார்கள்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை நடைபெறுகிறது. பெரம்பலூரில் 8,108 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பெரம்பலூர்,
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். தமிழ் பாட தேர்வு நாளை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை 143 பள்ளிகளை சேர்ந்த 4,328 மாணவர்களும், 3,780 மாணவிகளும் என மொத்தம் 8,108 பேர் 40 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.
Related Tags :
Next Story