எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 12:13 AM IST (Updated: 5 May 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

எல்.ஐ.சி. ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

கரூர், 
ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 3.5 சதவீத பங்கு விற்பனையை கண்டித்து நேற்று கரூர் சர்ச் கார்னர் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தின் ஊழியர்கள் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 2 மணிநேர வெளிநடப்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதற்கு கரூர் கிளை 1 தஞ்சை கோட்ட சங்க   துணை தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இதில் ஊழியர்கள் முத்துக்குமார், அருணகிரி, தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் கிளை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.



Next Story