முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதல்
நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீடாமங்கலம்;
நீடாமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாக்குதல்
நீடாமங்கலம் அருகே உள்ள செட்டிசத்திரம் மேலத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று செட்டிசத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பிரசாந்த்(27), கார்த்தி (35), செட்டிசத்திரம் மேலத்தெருவைச் சேர்ந்த சிட்டு என்ற அருள்ஜோதி(27), 17 வயது சிறுவன், ராஜா(40), செட்டிசத்திரம் வடக்குத்தெருவை சேர்ந்த அருள்செல்வன்(50), கொட்டையூர் முதல் தெருவை சேர்ந்த மகேந்திரன் (27), செட்டிசத்திரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமன்(49) ஆகியோர் சேர்ந்து கார்த்திக் வீட்டின் கதவை உடைத்து, கார்த்திக்கை கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த கார்த்திக் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கைது
இது குறித்து நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவன் மற்றும் கொட்டையூர் முதல்தெருவைச் சேர்ந்த மகேந்திரன் (27) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
சிகிச்சை
இதைத்தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது எதிர் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த செட்டிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பருத்திக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்த ராஜ்குமார்(35), எடஅன்னவாசல் கிராமத்தை சேர்ந்த கமலநாதன்(38), ஆகிய 3 பேரும் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், செட்டிசத்திரம் மேலத்தெருவைச் சேர்ந்த கோதண்டராமன்(25), கார்த்திக்(30) ஆகிய இருவரும் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இது குறித்து செட்டிசத்திரம் ராஜா அளித்த புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செட்டிசத்திரம் நடுத்தெருவை சேர்ந்த சண்முகவேலு(44) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story