தென்னிந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம்


தென்னிந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம்
x
தினத்தந்தி 5 May 2022 12:24 AM IST (Updated: 5 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சாம்பியன் ஷிப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு முகாம் கீழப்பழூரில் நடைபெற்றது.

கீழப்பழுவூர், 
கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
தென்னிந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி அரியலூரில் ஜூன் மாதம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. மேலும் ஆகஸ்டு மாதம் தமிழக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிமியர் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள திறமையான வீரர்களை ஒருங்கிணைத்து 6 அணிகளாக பிரித்து போட்டி நடைபெறுகிறது. 
இந்த தொடர்களில் 70-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட வாய்ப்பு பெறுவார்கள். மேலும், இந்த தேர்வில் தேர்வாகும் வீரர்கள் தமிழக அணியில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும். அதற்கான தேர்வு முகாம் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழூரில் உள்ள சுவாமி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
சான்றிதழ்
இந்த முகாமில் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் நிர்வாகிகள் ரமேஷ்கண்ணண், வீரராஜ், சூரிய பிரகாஷ், பிரதாப், ஹரிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கீழப்பழுவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து  கொண்டார். முகாமில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். 
தேர்வு முகாம் முடிவில் தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தேனி மாவட்டத்தை சேர்ந்த சந்திரன், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ராமநாதபுரத்தை சேர்ந்த வாஹித், பேட்டிங் பயிற்சியாளராக அரியலூரை சேர்ந்த வேங்கடேஷ், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக கம்பத்தை சேர்ந்த சிவகுமார், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துனைகேப்டனாக திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜ்மகேஷ்வரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்த தேர்வில் தேர்வான மாற்றுத்திறனாளிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேர்வாகும் கிரிக்கெட் வீரர்கள் அடுத்த மாதம் அரியலூரில் நடைபெற உள்ள தென்னிந்திய கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரிலும், தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியில் இடம் பெறுவர்.

Next Story