அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம்; போலீசில் புகார்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 12:24 AM IST (Updated: 5 May 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

தோகைமலை, 
தோகைமலை அருகில் உள்ள தெலுங்கப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அருண்குமார் (வயது 14). இவன் மணப்பாறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்ற அருண்குமார் மாலை வீட்டிற்கு அரசு பஸ்சில் வந்தான். தெலுங்கப்பட்டி பஸ் நிறுத்தம் வந்த பிறகு பஸ் நின்று உள்ளது. 
அப்போது அருண்குமார் கீழே இறங்கி கொண்டிருந்தபோது, திடீரென்று டிரைவர் பஸ்சை இயக்கி உள்ளார். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அருண்குமாருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Next Story