அரியலூரில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்


அரியலூரில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 5 May 2022 12:28 AM IST (Updated: 5 May 2022 12:28 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.

தாமரைக்குளம், 
தமிழ்நாடு முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 87 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,035 மாணவர்களும், 4,760 மாணவிகளும் என மொத்தம் 8,795 பேர் தேர்வினை எழுதுகிறார்கள். அரியலூர் கல்வி மாவட்டத்தில் 1,185 மாணவர்களும், 1,551 மாணவிகளும் என மொத்தம் 2,736 பேரும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 1,580 மாணவர்களும், 1,792 மாணவிகளும் என மொத்தம் 3,372 பேரும், செந்துறை கல்வி மாவட்டத்தில் 1,270 மாணவர்களும், 1,417 மாணவிகளும் என மொத்தம் 2,687 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். மேலும், தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் 55 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

Next Story