அணைபாளையம் பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 5 May 2022 12:31 AM IST (Updated: 5 May 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

சின்னதாராபுரம் அருகே உள்ள அணைபாளையம் பகவதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

க.பரமத்தி, 
சித்திரை திருவிழா
சின்ன தாராபுரம் அருகே அணைபாளையத்தில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறு வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 
அன்றிலிருந்து தினமும் இரவு சிறப்பு பூஜை நடந்தது. கடந்த 29-ந் தேதி அணைப்பாளையம், புதூர், காங்கேயம் பாளையம், அம்மன் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் குலம்பி அம்மன் சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தது. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கடந்த 1-ந்தேதி காலை கொடுமுடி சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்து அன்று மாலை தீர்த்தத்தை வைத்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. 
எருமை கிடா வெட்டி பூைஜ
கடந்த 2-ந்தேதி மாலை பகவதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடந்தது.  நேற்று முன்தினம் காலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை குலம்பி அம்மன்கோவிலில் பகவதி அம்மன் சாமிக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டுவந்தனர். 
அங்கு எருமைக் கிடா வெட்டி பூஜை நடந்தது. இரவு கோவில் முன்பு நடப்பட்ட கம்பத்தையும், சாமி முன்பு வைக்கப்பட்ட கும்பத்தையும் அருகில் உள்ள அமராவதி ஆற்றில் விட்டனர். 
அன்னதானம் 
வெள்ளியால் ஆன பகவதி அம்மன் சாமியை காங்கேயம் பாளையத்தில் உள்ள பெரிய தனக்காரர் வீட்டிற்கு கொண்டு சென்று அங்கு பூஜை நடந்தது. பின்பு கோவிலுக்கு கொண்டு வந்தனர். மீண்டும் அந்த சாமியை மணியக்காரர் வீட்டுக்கு கொண்டு சென்று அங்கு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
இதற்கான ஏற்பாடுகளை அணைப்பாளையம், புதூர், காங்கேயம்பாளையம், அம்மன் நகரைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story