கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சாவு
கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
துவரங்குறிச்சி, மே.5-
கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
கார் மோதியது
மதுரை மாவட்டம் மருவூர்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 19). இவர் மற்றும் அவரது நண்பர்களான பிரவீன் (24), அஜித் குமார் (25) ஆகியோர் கடந்த 1-ந்தேதி திருச்சியில் இருந்து மதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
கோவில்பட்டி பாலம் அருகே சென்ற போது திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நேற்று காளிதாஸ் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். மற்ற 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story