திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி:
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்
நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரத்தில் புகழ்பெற்ற திருவாழ்மார்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 10 நாள் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று காலையில் 6 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
கொடியேற்றம் நிகழ்ச்சி முடிந்ததும் 10 நாள் திருவிழாவுக்கான நிகழ்ச்சி நிரல் நோட்டீஸ் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று வழங்கப்படவில்லை.
இதனால் பக்தர்களுக்கும், கோவில் அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
தேரோட்டம்
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சாமிக்கு உச்சிகால பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கருடவாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், 6 மணிக்கு ஆராட்டும், இரவு 8 மணிக்கு கொடி இறக்குதலும், 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story