பள்ளத்தில் தவறி விழுந்தவர் சாவு
பள்ளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்
திருவிடைமருதூர்
கும்பகோணம் அருகே உள்ள செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் கோ.சி.மணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 55). இவர் தனது இருசக்கர வாகனத்தில் நாகரசம்பேட்டை கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மருதாநல்லூர் அருகே அவர் வந்தபோது சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட 9 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில், நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story