வேனில் மணல் கடத்தியவர் கைது


வேனில் மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 4 May 2022 8:07 PM GMT (Updated: 2022-05-05T01:37:21+05:30)

வேனில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்

திருச்சி, மே.5-
திருச்சி எடமலைப்பட்டிபுதூரை அடுத்த பஞ்சப்பூர் பகுதியில் நேற்று அதிகாலை எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது அங்கு வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் கோரை ஆற்றிலிருந்து வேனில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர், கீழபஞ்சப்பூரை சேர்ந்த தியாகராஜன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story