சிவகங்கையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை


சிவகங்கையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x
தினத்தந்தி 5 May 2022 1:39 AM IST (Updated: 5 May 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்தன.

சிவகங்கை,
சிவகங்கையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்தன.
கடும் வெயில்
சிவகங்கை நகரில் நேற்று பகலில் கடும் வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் மாலை 5½ மணி அளவில் திடீரென்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இதனால் நகரில் நிலவிய கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. மேலும் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
இந்த மழையினால் சிவகங்கை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சிவகங்கை கலெக்டர் அலுவலகம் நகர் காவல் நிலையம் போன்ற இடங்களில் வளர்ந்திருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நகர் காவல் நிலையத்தில் மரம் முறிந்து விழுந்ததில் போலீஸ் நிலையத் திற்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு பாதை அடைபட்டது.
தவிப்பு
 இதனால் போலீஸ் நிலையத்திற்குள் இருந்த போலீசார் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இதன் பின்னர் கீழே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தினர். நேற்று மாலையில் மட்டும் சிவகங்கையில் 23 மில்லி மீட்டரும் மானாமதுரையில் 40 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

Related Tags :
Next Story