விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 5 May 2022 1:43 AM IST (Updated: 5 May 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்

திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது சின்ன வலை யங்குளம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது65). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப் பட்டு வந்துள்ளார். இதனால் மன விரக்தி அடைந்து சில தினங்களுக்கு முன்பு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்து உள்ளார். உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் பெருமாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இவரது மகன் முருகன் திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Next Story