போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயர்
தஞ்சையில், போலீஸ் வயர்லெஸ் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த என்ஜினீயரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர்
தஞ்சை மிஷன் தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 28). என்ஜினீயரான இவர் நேற்று தஞ்சை கீழவாசல் போலீஸ் குடியிருப்புக்கு சென்றார். அங்கு உள்ள 100 அடி உயரம் கொண்ட வயர்லெஸ் கோபுரத்தில் திடீரென ராம்குமார் ஏறினார். 20 அடி உயரம் வரை சென்ற அவர் அங்கேயே நின்று கொண்டு தான் கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அவரை கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
போலீசார் மீட்டனர்
ஆனால் போலீசார் கூறிய எதையும் ராம்குமார் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதனையடுத்து கோபுரத்தில் போலீசார் ஏறி ராம்குமாரை பத்திரமாக மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ராம்குமார் குடியிருக்கும் வீட்டுக்கு 6 மாதங்களாக வாடகை செலுத்த முடியவில்லை எனவும், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்துவதால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று இந்த கோபுரத்தில் ஏறியதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தஞ்சையில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story